Red Hat Enterprise Linux 4.6 வெளியீட்டு அறிக்கை

Red Hat Enterprise Linux 4.6 வெளியீட்டு அறிக்கை


அறிமுகம்

இந்த ஆவணத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கபப்டுகின்றன:

  • வெளியீட்டு அறிக்கை மேம்படுத்தல்கள்

  • நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

  • வசதி மேம்படுத்தல்கள்

  • கர்னல்-தொடர்பான மேம்படுத்தல்கள்

  • இயக்கி மேம்படுத்தல்கள்

  • வேறு மேம்படுத்தல்கள்

  • தொழில்நுட்ப முன்பார்வைகள்

  • தெரிந்த சிக்கல்கள்

Red Hat Enterprise Linux 4.6 பற்றிய தற்போதைய தகவல், இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. மேம்படுத்தப்பட்ட Red Hat Enterprise Linux 4.6 இன் வெளியீட்டு அறிக்கையை பின்வரும் இணைய முகவரியில் பார்க்கவும்:

http://www.redhat.com/docs/manuals/enterprise/

வெளியீட்டு அறிக்கை மேம்படுத்தல்கள்

Red Hat Enterprise Linux 4 .6 பற்றிய தற்போதைய தகவலை பெற்றுள்ளது, இது வெளியீட்டு அறிக்கை மற்றும் விநியோகத்தில் காணப்படாது.

  • சில கர்னல் அவசர எச்சரிக்கைகள் பயனுருக்கு ஆபத்தாக இருக்கும் அதாவது CPU அதிக சூடாகும் போது. இந்த நேரத்தில், ஒவ்வொரு திறந்த பணியகத்தின் வழியாகவும் ஒரு எச்சரிக்கை சாளரம் தோன்றும்.

    இவ்வாறு நிகழும் போது, எச்சரிப்பை கீழ்படுத்துவதற்காக sysctl -w kernel.printk=0 நீங்கள் இதை இயக்கலாம். மாறாக, ரூட் பணியகத்தில் காணப்படும் செய்திகளில் காணப்படும் பிழைகளை குறைக்கலாம். இதை செய்வதற்கு, பின்வருவனவற்றை திருத்தவும் /etc/syslog.conf:

    *.emerg                                        *
                              

    இதனை மாற்றவும்:

    *.emerg                                        root
                              
  • sysreport இது sosகாக நீக்கப்பட்டது. sosஐ நிறுவ, up2date -i sosஐ இயக்கவும். இது sos ஐ நிறுவி sysreportஐ நீக்குகிறது. இது எந்த இருக்கும் கிக்ஸ்டார்ட் கோப்புகளை மேம்படுத்த பரிந்துரைக்கிறது.

    sosஐ நிறுவிய பின், அதை பெற sosreportஐ பயன்படுத்தவும். sysreportஐ பயன்படுத்தி ஒரு எச்சரிக்கையை sysreport நீக்கியது என எச்சரிக்கிறது; தொடர்ந்து sosreportஐ எடுக்கிறது.

    குறிப்பாக, நீங்கள் sysreport கருவியை பயன்படுத்த வேண்டும், அதை எடுக்க கட்டளை sysreport.legacyஐ பயன்படுத்தவும்.

    sosreport பற்றிய மேலும் தகவலுக்கு, man sosreport மற்றும் sosreport --helpஐ பார்க்கவும்.

நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

பின்வரும் பிரிவில் Red Hat Enterprise Linuxஇன் நிறுவல் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.

குறிப்பு

ஏற்கெனவே நிறுவப்பட்ட Red Hat Enterprise Linux 4 ஐ Red Hat Enterprise Linux 4.6 ஆல் மேம்படுத்தவும், மாற்றப்பட்ட அந்தத் தொகுப்புகளையும் மேம்படுத்த, நீங்கள் Red Hat Network ஐ பயன்படுத்தலாம்.

Red Hat Enterprise Linux 4.6 புதிதாக நிறுவ அனகோண்டாவை பயன்படுத்தி புதிதாக நிறுவலாம் அல்லது Red Hat Enterprise Linux 4 இன் சமீபத்திய மேம்படுத்தல் பதிப்புக்கு மேம்படுத்தலாம்.

  • Red Hat Enterprise Linux 4.6 இல் உள்ளவைகளை குறுவட்டுகளில் நகலெடுக்க விரும்பினால் (பிணையம் வழியாக நிறுவ தயார்படுத்த) இயக்கத்தளத்திற்கான குறுவட்டுகளை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் குறுவட்டுகளையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோண்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு சிக்கலை நிறுவலை தடை செய்யும்.

    Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.

  • நீங்கள் தொடர் பணியகம் வழியாக Red Hat Enterprise Linux 4.6 ஐ நிறுவினால், புகுபதிவு வரி தோன்றாது. இதில் பணிபுரிய, /etc/yaboot.confஐ திறந்து பின்வரும் வரியைச் சேர்க்கவும்:

    append="console=tty0 console=ttyS4 rhgb quiet"
    

    இந்த வரியை திருத்த, console=tty0 மற்றும் console=ttyS4 ஆகியவற்றின் வரிசையை மாற்றி பின்வருமாறு வாசிக்கப்படும்:

    append="console=ttyS4 console=tty0 rhgb quiet"
    

வசதி மேம்படுத்தல்கள்

nordirplus

இப்போது நீங்கள் READDIRPLUS அழைப்பை ஒரு புதிய NFS mount விருப்பம் nordirplusஐ பயன்படுத்தி ஏற்றலாம்.

SB600 சேவை

libata இயக்கி இப்போது SB600 IDE சாதனங்களில் துணைபுரிகிறது.

SB600 IDE சாதனங்களில் ide-generic முறையை கையாளுதலில் பயிற்சி உள்ளவர்கள், /dev/hd* உள்ளீடுகள் இப்போது /dev/sd* ஆகும்.

சம்பா

samba பதிப்பு 3.0.25bக்கு மேம்படுத்தப்பட்டது. இது பல்வேறு தீர்க்க முடியாத சிக்கல்களை Windows 2003™ மற்றும் Windows Vista™இல் அறிக்கையிடுகிறது (சமீபத்திய வெளியீட்டில் சரி செய்யப்பட்டது).

அனைத்து samba மறுபார்வைகளும் இந்த மேம்படுத்தலில் entailed invasive குறி சில அவசிய குறி பாதையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த பதிப்பு 3.0.10இல் சரியாக இல்லை. எனினும், அனைத்து samba தொகுப்பும் பதிப்பு 3.0.25bக்கு மறுஅமைவு செய்யப்படுகிறது.

மறுஅடிப்படையால், சில விருப்ப உடபுகுத்தல் முறைகள் மற்றும் கூறுகள் பண்புகள் அடிக்கடி மாற்றப்படுகிறது. அதாவது sambaஐ மேம்படுத்திய பின், கட்டமைப்பு கோப்பு கைமுறையாக திருத்தப்பட வேண்டும்.

சில விருப்பங்கள் ldap filter போன்று மற்றும் குறைந்தபட்ச கடவுச்சொல் எண்ணிக்கை இப்போது நீக்கப்பட்டது. இதனை sambaஇன் புதிய பதிப்பில் மேம்படுத்தும் முன், samba தொகுப்பு பிழைத்திருத்தத்தை அணுகி உங்கள் கணினி நீக்கப்பட்ட விருப்பங்களை சார்ந்த உள்ளதா என்பதை அறியவும்.

samba வின் இந்த மேம்படுத்தல் பல்வேறு வசதி மேம்படுத்தல்களை கொண்டுள்ளது:

  • Stricter பெயரிடும் விதிகள் இப்போது வலியுறுத்தப்படுகிறது. இந்த புதிய விதிகள் force user, force group, valid user மற்றும் பயனர் அல்லது குழு பெயர்களை ஏற்கும் பிற அடைவுகளை பாதிக்கிறது. இந்த மேம்படுத்தலில், பயனர்/குழு பெயர் முழுவதும் தகுதி பெற வேண்டும்.

    எடுத்துக்காட்டாக, ஒரு கணினி DOMAIN என பெயரிடப்பட்ட செயற்களத்தில் சேர்ந்தால், ஒரு பயனர் பெயர் foo அந்த செயற்களத்தில் DOMAIN\foo வடிவத்தில் பயன்படுத்தப்பட வேண்டும். foo என வெறுமனே பயன்படுத்தினால் கணினிக்கு அனுமதி மறுக்கப்படும்.

  • பல passdb பின்புலங்கள் சேவை இப்போது நீக்கப்பட்டது. பல passdb சேவை சில சமயங்களில் சேவையகத்தில் சிறிய பயன்பாட்டை சேர்க்கும் போது சிக்கல்களில் முடிகிறது.

    பல தரவுத்தளங்களை பயன்படுத்த, அவற்றை ஒன்றாக்கவும். பின்னர், அதன் கணக்குகளை வேறு தரவுத்தளத்தில் pdbebit வசதியை பயன்படுத்தி சேமிக்கவும்.

  • winbindd இப்போது சேவையகத்தின் செயற்கள வகையை கண்டறிகிறது மற்றும் சரியான பாதுகாப்பு முறையை தானாக தேர்ந்தெடுக்கிறது. security = domain ஐ அமைக்கும் போது winbindd இல் kerberos/ldapஐ பயன்படுத்தி AD-capable ஆக ஒரு செயற்களத்தில் இணைக்கிறது.

  • ldap திட்டம் இப்போது விரிவாக்கப்பட்டது. நீங்கள் ldapsamஐ பின்புலமாக பயன்படுத்தினால், இந்த விரிவாக்கப்பட்ட ldap திட்டத்தை மேம்படுத்தவும். இந்த மேம்படுத்தல் பின்னோக்கும்.

    நீங்கள் விரிவாக்கப்பட்ட ldap திட்டத்தில் மேம்படுத்தும் போது sambaSID சில துணை ஒப்பீடுகளை கையாள அகரவரிசைப்படுத்தவும்.

  • winbindd NSS இப்போது முன்னிருப்பாக OFF இருக்கும். இந்த பலன் பெரிய சூழலில் பல செயற்கள கட்டுப்படுத்திகள், தொலை இடங்களை கொண்டுள்ளது. உங்கள் சூழல் user/group அடிப்படையாக கொண்டிருந்தால், நீங்கள் அதனை winbind enum users மற்றும் winbind enum groups விருப்பங்களால் செயல்படுத்தலாம்.

கர்னல்-தொடர்பான மேம்படுத்தல்கள்

  • madvise() இப்போது DONTFORK மற்றும் DOFORKக்கு துணைபுரிகிறது.

  • தேவையின் பொருட்டு /proc/sys/vm/drop_caches pagecache மற்றும் slabcache ஐ துடைக்க சேர்க்கப்பட்டுள்ளது.

  • /proc/sys/vm/max_queue_depth இல் மேல் மதிப்பு வரையறையை நீக்கியது.

  • oom_killer இப்போது கர்னல் பீதியை நினைவகத்திற்கு வெளியே நிலையில் செயல்படுத்த துணைபுரிகிறது.

  • smaps செயல்பாடு இப்போது துணைபுரிகிறது.

  • ஒரு nfsv4 link பிழை i_nlink எண்ணிக்கையை மேம்படுத்தலில் இருந்த பிழை சரி செய்யப்பட்டது.

  • dir_mode மற்றும் file_mode இப்போது முன்னிருப்பு மதிப்புகளை கொண்டுள்ளது.

  • CONFIG_KPROBES இப்போது Systemtap க்கு துணைபுரிய செயல்படுத்தப்பட்டுள்ளது.

  • cpuid AMD செயலிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

  • கர்னல் மூலம் இப்போது SMBus சாதன IDகளை AMD மற்றும் ATI SB600களில் கொண்டுள்ளது.

  • கூடுதல் சாதன IDகள் ATI SB700யில் சேர்க்கப்பட்டது.

  • MMCONFIG இப்போது Intel Core 2 Duo platformஇல் முன்னிருப்பாக செயல்நீக்கப்பட்டது.

  • Oprofile இப்போது புதிய Greyhound செயல்திறன் எண்ணிக்கை நிகழ்வுகளுக்கு துணைபுரிகிறது.

  • /proc NUMA வரைபடங்கள் இப்போது துணைபுரிகிறது.

  • SB700 SATA கட்டுப்படுத்தி இப்போது துணைபுரிகிறது.

  • Intel 6300ESB Watchdog நேரம்காட்டி இப்போது துணைபுரிகிறது.

இயக்கி மேம்படுத்தல்கள்

  • megaraid_sas: பதிப்பு 00.00.03.13க்கு மேம்படுத்தப்பட்டு PowerEdge Expandable Raid Controller (PERC 6)க்கு துணைபுரிகிறது.

  • qla2xxx: பதிப்பு 8.01.07.04க்கு மேம்படுத்தப்பட்டது. இது பின்வரும் மாற்றங்களை செயல்படுத்துகிறது:

    • மின் மேலாண்மை சிக்கல்களுக்கு D3 நிலையில் ஒரு பணி சேர்க்கப்பட்டுள்ளது

    • மேம்படுத்தப்பட்ட "queue-full" சூழல்களை கையாளுதல்

    • iIDMAக்கு பொதுவான துணை சேர்க்கப்பட்டுள்ளது

    • IRQ #0 பயன் இப்போது அனுமதிக்கப்படுகிறது

    • RSCN, big-endian புரவலன்களில் இப்போது சரி செய்யப்பட்டது

    • சரி செய்யப்பட்ட பைட் fc_host fabric பெயரில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது

    • பல்வேறு குறிப்பு எண்ணிக்கை சிக்கல்கள் சரி செய்யப்பட்டது

    • Fibre தட முகப்பு விரைவு உணர்வு புதிய Dell mezzanine அட்டைகள் இப்போது துணைபுரிகிறது

  • qla3xxx: சமீபத்திய பதிப்புக்கு (v2.03.00-k4-RHEL4U6) மேம்படுத்தப்பட்டது. இது பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது:

    • 4032 சிப் இப்போது துணைபுரிகிறது

    • Agere PHY chipகள் இப்போது துணைபுரிகிறது

    • மறுஅமைவு செய்யும் சிக்கல் சரிசெய்யப்பட்டது

    • RX பாக்கெட் கையாளுதலை சுத்தப்படுத்துகிறது

    • NAPI குறியீட்டை செயல்திறனை அதிகரிக்க சுத்தப்படுத்துகிறது

  • qla4xxx: பதிப்பு 5.01.01-d1க்கு மேம்படுத்தியது. இது பின்வரும் மாற்றங்களை செயல்படுத்துகிறது:

    • firmware மேம்படுத்தல்கள் அஞ்சல் பெட்டி கட்டளைகளுக்கு இப்போது துணைபுரிகிறது

    • ஒரு சரியான NULL சுட்டிக்காட்டி குறிப்பிடுதல் சரி செய்யப்பட்டது

    • மேம்படுத்தப்பட்ட RESET_HA_INTR நிறைவு கணிமொழி வேறு துறையை மீண்டும் துவக்கும் போது அனுமதிக்கிறது (இரட்டை துறை அட்டைகளுக்கு செயல்படுத்துகிறது)

    • data_cmndக்கு குறிப்புரையை நீக்கியது

    • IPv6க்கு துணைபுரிகிறது

    • ஒவ்வொரு முக்கியமான பிழைக்கும் இப்போது மறுஅமைவு செய்யப்படுகிறது

    • scsi நிலை இப்போது நிலை பைட்டில் சேர்க்கப்பட்டுள்ளது

    • உணர்வு குறியீடு RECOVERED_ERROR இப்போது சரியாக அறிக்கையிடப்படுகிறது

    • ஒரு இயக்கி இறக்கப்படும் போது DPC_RESET_HA ஏற்படாது

  • mpt fusion இயக்கிகள் பதிப்பு 3.02.99க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல மாற்றங்களை கொண்டுள்ளது:

    • மேம்படுத்தப்பட்ட பிழை கையாளுதல்

    • செயற்கள மதிப்பிடுதல் இப்போது ஒரு சாதன அடிப்படையில் முதல் விசாரணையில் செய்யப்படுகிறது அல்லது IR firmwareயின் கோரிக்கையால் செய்யப்படுகிறது

    • PowerPCக்கு சேவை சேர்க்கப்பட்டுள்ளது

    • ஒவ்வொரு SAS கட்டுப்படுத்தியும் 1024 சாதனங்கள் வரை துணைபுரிகிறது

    • மேம்படுத்தப்பட்ட CSMI IOCTL செயல்பாடுகள்

  • lpfc: பதிப்பு 8.0.16.34க்கு மேம்படுத்தப்பட்டது. இது பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ளது:

    • PCI IDஐ அடிப்படையாக கொண்டுhba வரிசை கணக்கீடு நீக்கப்பட்டது

    • 8G speed மற்றும் Saturn HBAக்கு சேவை சேர்க்கப்பட்டுள்ளது

    • lpfc_ns_rsp முழு GID_FT பதிலையும் கையாள சரி செய்யப்பட்டது

    • இயக்கியை இறக்கும் போது ஒரு queuecommand பீதி ஏற்பட்டது சரி செய்யப்பட்டது

    • lpfc எச்சரிக்கை சரி செய்யப்பட்டது

    • NPort உறுதிப்படுத்தல் fabric துறைகளில் செயல்படவில்லை

    • HBAகளின் துணை கணினி IDயில் சார்பு இயக்கிகளை நீக்கியது

    • ஒரு தொகுதி மதிப்புரு அதிகபட்ச வாசிப்பு DMA பைட் எண்ணிக்கையில் சேர்க்கப்படுகிறது

    • மேம்படுத்தப்பட்ட கண்டுபிடிக்கப்பட்ட தருக்கம் RFF ஐ இணைப்புகளுக்கு அனுப்புகிறது

    • அஞ்சல் பெட்டி நேரம் முடிதல் மதிப்புகளை மாற்றவும்

    • Saturn heart beat கட்டளை இப்போது துணைபுரிகிறது

    • Saturn வெப்பநிலை ஆய்வி இப்போது துணைபுரிகின்றன

    • firmware ஐ பதிவிறக்கும் போது ஏற்பட்ட கணினி பீதி பிழை சரி செய்யப்பட்டது

  • arcmsr: இயக்கி இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டு Areca RAID கட்டுப்படுத்திகளுக்கு துணைபுரிகிறது.

  • openib மற்றும் openmpi: OFED (OpenFabrics Enterprise Distribution) பதிப்பு 1.2க்கு மேம்படுத்தப்பட்டு InfiniBand சேவையை அளிக்கிறது.

  • cciss: பின்வரும் மாற்றங்களுக்குப் பதிப்பு 2.6.16 க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது:

    • Smart Array E500 இப்போது துணைபுரிகிறது

    • மறுதுவக்க அறிவுப்பு இப்போது துணைபுரிகிறது

    • HP RAID வகுப்பு சேமிப்பக சாதனங்கள் இப்போது துணைபுரிகிறது

  • adp94xx: பதிப்பு 1.08-13க்கு மேம்படுத்தப்பட்டு AIC94XX Razor SAS கட்டுப்படுத்தியை பயன்படுத்தும் இயக்கிகளைக்கு சேவையளிக்கிறது. இந்த மேம்படுத்தல் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்துகிறது:

    • Sequencer firmware V17 இலிருந்து V32க்கு மேம்படுத்தப்பட்டது

    • மேம்படுத்தப்பட்ட பிழை கையாளுதல் SCSI கட்டளைகளை மேல் அடுக்கிலிருந்து நீக்குகிறது

    • Empty Data Buffer (EDB) நேரம் காட்டி நிகழ்வு சாதனங்களை நீக்க சேர்க்கப்பட்டுள்ளது

    • Fujitsu இயக்கிகள் கண்டறியப்படுவதில் இருந்த சிக்கல் பிழை சரி செய்யப்பட்டது

    • smartctl வசதி இப்போது சரியாக வேலை செய்கிறது

    • இயக்கி இப்போது EDB ஐ SATA சாதனங்களில் அடுத்தடுத்த ASYNC நிகழ்வுகளில் வெறுமையாக்கப்படுகிறது

    • Inquiry, Read Capacity மற்றும் Report LUN கட்டளைகளுக்கு இயக்கி தவறான தரவை வழங்குவதில்லை

  • s2io: பதிப்பு 2.0.25.1க்கு மேம்படுத்தப்பட்டு Neterion Xframe-II 10GbE பிணைய தகவிக்கு சேவையளிக்கிறது.

  • cxgb3: Chelsio 10G Ethernet Network Controllerக்கு சேவையளிக்க மேம்படுத்தப்படுகிறது.

  • Promise SATA இயக்கி இப்போது PATA சாதனங்களில் துணைபுரிகிறது.

  • dell_rbu: பதிப்பு 3.2க்கு மேம்படுத்தப்பட்டு பாக்கெட் முறையில் பருநிலை நினைவக ஒதுக்கீட்டை அதிகரிக்க பயன்படுகிறது. இந்த மேம்படுத்தல் kmallocspinlock ஐ பாக்கெட் முறையில் வைக்கும் போது தவிர்க்கப்படுகிறது.

  • lmsensors இப்போது Nforce4 சிப்செட்களுக்கு துணைபுரிகிறது.

  • பொதுவான IDE இயக்கி இப்போது JMicron JMB368, JMB363, JMB366, JMB360, மற்றும் JMB361 IDE கட்டுப்படுத்திகளுக்கு துணைபுரிகிறது.

  • aacraid இயக்கி: பதிப்பு 1.1.5-2441க்கு மேம்படுத்தப்பட்டு PRIMERGY RX800S2 மற்றும் RX800S3க்கு துணைபுரிகிறது.

  • bnx2 இயக்கி: பதிப்பு 1.5.11 க்கு மேம்படுத்தப்பட்டு 5709 வன்பொருளுக்கு துணைபுரிகிறது.

  • ibmveth: netpoll மற்றும் netconsole ஐ சேர்த்து netdump செயல்திறன்களுக்கு துணைபுரிய செயல்படுத்தப்பட்டுள்ளது.

  • tg3 இயக்கி பதிப்பு 3.77க்கு மேம்படுத்தப்பட்டு பொதுவான பிழை திருத்தங்கள் மற்றும் Broadcom 5906 மற்றும் 5722 சிப்செட்கள் சேவைக்கு செயல்படுத்தப்படுகிறது.

  • forcedeth-0.60 இயக்கி: இந்த வெளியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பல அவசியமான பிழைத்திருத்தங்களை வாடிக்கையாளர்களுக்கு NVIDIA MCP55 சிப்செட்கள் மற்றும் onboard NIC களை பயன்படுத்தி செய்கிறது.

  • amd74xx.c: NVIDIA MCP55, MCP61, MCP67, மற்றும் AMD CS5536 IDE கட்டுப்படுத்திகளுக்கு துணைபுரிகிறது.

வேறு மேம்படுத்தல்கள்

  • active-active failover (ALUA)இல் dm-multipathஐ பயன்படுத்தி EMC Clariion சேமிப்பகம் இப்போது துணைபுரிகிறது

  • Challenge Handshake Authentication Protocol (CHAP) பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் 256 எழுத்துகளை வரையறையாக கொண்டுள்ளது.

தொழில்நுட்ப முன்பார்வைகள்

தொழில்நுட்ப முன்பார்வை வசதிகளை தற்போது Red Hat Enterprise Linux 4.6 இன் கீழ் சந்தா சேவைகளில் துணை புரிவதில்லை, அவை முழுமையாக வேலை செய்வதில்லை மற்றும் அது தயாரிப்புக்குப் பயன்படுவதில்லை. எனினும், இந்த வசதி வாடிக்கையாளரை திருப்திப்படுத்தவும், விரிவான ஒரு எதிர்பார்த்தலுக்கும் சேர்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வசதியை தயாரிப்பு இல்லாத சூழலில் பயனுள்ளதாக காணலாம். வாடிக்கையாளர்களும் இந்த வசதிக்கு முழுமையாக சேவையளிக்கும் முன் தொழில்நுட்ப முன்பார்வை பற்றிய கருத்துக்களை கூறலாம். அதிக அளவு பாதுகாப்பு சிக்கலில் பிழைத்திருத்தங்கள் கொடுக்கப்படும்.

தொழில்நுட்ப முன்பார்வை வசதி உருவாக்கத்தின் போது, கூடுதல் கூறுகள் பொதுவாக சோதனை செய்ய வரும். இதுவே இனிவரும் வெளியீட்டில் Red Hat முழுவதும் துணைபுரிய அறிகுறியாகும்.

Systemtap

Systemtap இலவச மென்பொருள் (GPL) வடிவமைப்பை இயங்கும் லினக்ஸ் கணினி பற்றி தகவலை சேகரிப்பது மூலம் கொடுக்கிறது. இது அதன் திறன் அல்லது செயல்பாடு சிக்கலை ஆராயும். systemtap உதவியால், நிரலாளர்கள் சலிப்படைதல், மறு ஒருங்கிணைத்தல், நிறுவல் மற்றும் மறு துவக்க வரிசை போன்றவற்றுக்கு செல்ல வேண்டாம்.

Frysk GUI

frysk திட்டத்தின் நோக்கம் அறிவார்ந்த, பகிரக்கூடிய, கணினி கண்காணித்தலில் மற்றும் பிழைத்திருத்தும் கருவியை நிரலாளர் மற்றும் கணினி நிர்வாகிகளால் உருவாக்குவதேயாகும்:

  • இயக்கும் பணிகள் மற்றும் திரட்களை கண்காணித்தல் (உருவாக்கம் மற்றும் சிக்கலான நிகழ்வுகளையும் சேர்த்து)

  • பூட்டும் விதிமுறைகளை பயன்படுத்தி கண்காணித்தல்

  • பாதுகாப்பற்ற deadlocks

  • தகவலைப் பெறுதல்

  • எந்தப் பணியையும் பட்டியலிருந்து தேர்ந்தெடுத்து பிழைத்திருத்தம் செய்கிறது அல்லது frysk ஐ அழியும் அல்லது தவறான ஒரு மூல குறியீடு (அல்லது வேறு) சாளரத்தில் திறக்க அனுமதிக்கலாம்.

இந்த மேம்படுத்தலில், frysk வரைகலை பயனர் முகப்பு ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாகும், இங்கு frysk கட்டளை வரி முகப்பில் முழுவதும் துணை புரிகிறது.

gcc

GNU Compiler Collection (gcc-4.1) இந்த வெளியீட்டில் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கம்பைலர் Red Hat Enterprise Linux 4.4 இல் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டிருந்தது.

gcc-4.1 பற்றிய மேலும் விவரங்களுக்கு, http://gcc.gnu.org/ இல் திட்ட இணைய தளத்தை பார்க்கவும். gcc-4.1.2க்கு விரிவான கையேட்டிற்கு http://gcc.gnu.org/onlinedocs/gcc-4.1.2/gcc/ இல் வாசிக்கவும்.

OpenOffice 2.0

OpenOffice 2.0 இப்போது இந்த வெளியீட்டில் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு பல வளர்ச்சியை கொண்டுள்ளது, ODF மற்றும் PDF செயல்பாடுகள், மின் கையொப்பங்கள் மற்றும் பல வடிவங்கள் மற்றும் முகப்பு. கூடுதலாக, OpenOffice 2.0 விரிதாள் இப்போது பிவொட் அட்டவணை துணை மற்றும் 65000 நிரைகளையும் கொண்டுள்ளது.

OpenOffice 2.0 பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.openoffice.org/dev_docs/features/2.0/index.html ஐ பார்க்கவும்.

autofs5

autofs5 இந்த வெளியீட்டில் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த autofs இன் புதிய பதிப்பு பல தீர்க்க முடியாத சிக்கல்களை தீர்க்கிறது. autofs5 வசதி பின்வரும் மேம்படுத்தல்களை கொண்டுள்ளது:

  • நேரடி ஒப்பீடு சேவை, கோப்பு முறைமை வரிசைப்படுத்தலில் தானாக கோப்பு முறைமைகளை ஏற்ற நுட்பத்தை கொடுக்கிறது.

  • lazy mount மற்றும் umount சேவை

  • புதிய கட்டமைப்பு கோப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட LDAP துணை, /etc/autofs_ldap_auth.conf

  • nsswitch.conf பயனின் முழுமையான செயல்படுத்தல்

  • நேரடி ஒப்பீடுகளுக்கு பல முதன்மை ஒப்பீடு உள்ளீடுகள்

  • ஒப்பீட்டுக்கு முழுமையான செயல்படுத்தலை சேர்க்க, autofs இல் முதன்மை ஒப்பீடுகளில் குறிப்பிட்ட ஒப்பீடுகளின் உள்ளடக்கங்களை அனுமதிக்கிறது

தற்போது, autofs5 முதன்மை ஒப்பீடு சொல் ஆய்வி ஏற்றப்புள்ளி அல்லது ஒப்பீடு குறிப்பீட்டில் சரியாக மேற்கோள் சரங்களை இட முடியவில்லை. எனினும் மேற்கோள் சரங்கள் ஒப்பீட்டில் தானாக எழுதப்பட வேண்டும்.

autofs நிறுவப்பட்டு முன்னிருப்பாக இந்த மேம்படுத்தலில் இயங்குகிறது. எனினும், நீங்கள் autofs5 தொகுப்பை கைமுறையாக நிறுவி autofs5 விரிவாக்கங்களை பயன்படுத்தலாம்.

நீங்கள் autofs மற்றும் autofs5ஐயும் நிறுவலாம். எனினும், ஒன்று மட்டுமே automount சேவையகளில் பயன்படுத்த முடியும். உங்கள் automounter ஆக autofs5ஐ நிறுவி பயன்படுத்த, இந்த வழிமுறைகளை செய்யவும்:

  1. ரூட்டாக புகுபதிவு செய்து autofs சேவையில் service autofs stop கட்டளையை பயன்படுத்தி நிறுத்தவும்.

  2. autofs சேவையை chkconfig autofs off கட்டளை மூலம் செயல்நீக்கம் செய்யவும்.

  3. autofs5 தொகுப்பை நிறுவவும்.

  4. autofs5 சேவையை chkconfig autofs5 on கட்டளை மூலம் செயல்படுத்தவும்.

  5. autofs5service autofs5 start கட்டளை மூலம் துவக்கவும்.

autofs5 பற்றிய மேலும் தகவலுக்கு, பின்வரும் man பக்கங்களை பார்க்கவும் (autofs5 தொகுப்பினை நிறுவிய பின்னர்):

  • autofs5(5)

  • autofs5(8)

  • auto.master.v5(5)

  • automount5(8)

நீங்கள் மேலும் விவரங்களுக்கு, /usr/share/doc/autofs5-<version>/README.v5.release ஐ அணுகலாம்.

தெரிந்த சிக்கல்கள்

  • தற்போது, ext2online EXT2 கோப்பு முறைமையில் வேலை செய்யாது.

  • நடப்பு கர்னல் Data Terminal Ready (DTR) சிக்னல்களை தொடர் துறைகளில் துவக்கும் நேரத்தில் அச்சிடுகிறது. DTR சில சாதனங்களுக்கு தேவைப்படுகிறது; இதன் தீர்வாக, கர்ன்ல துவக்க செய்திகள் தொடர் பணியகங்களில் சில சாதனங்களில் அச்சிடப்படுவதில்லை.

  • Emulex lpfc இயக்கி ஒருmbox கோப்பினை /sys/class/scsi_host/host<scsi host number>/ இல் உருவாக்குகிறது. ஒரு பயன்பாடு systool போல இந்த கோப்பினை வாசித்தல், பின்வரும் பிழை செய்தி பணியகத்தில் அச்சிடப்பட்டு கணினி பதிவு கோப்பிலிருந்து வெளியேறும்:

    mbox_read: Bad State
    

    இந்த செய்தி தேவையில்லாதது, இதனை பாதுகாப்பாக தவிர்க்கப்படலாம். Emulex lpfc இயக்கியின் இனிவரும் வெளியீட்டில் இந்த பிழை செய்தியை நீக்கும்.

( x86 )